இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளைக் கட்டமைக்க ஐஐடிஎம் பிரவர்தக், சர்வம் ஏஐ நிறுவனம் ஆகியவை கூட்டாண்மையை ஏற்படுத்துகிறது

மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்காக செயற்கை நுண்ணறிவு தீர்வுகளைக் கட்டமைக்க ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளையும், சர்வம் ஏஐ (ஆக்சன்வைஸ் தனியார் நிறுவனம்) ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சூழலின் முன்னோடியாகத் திகழும் இரண்டு நிறுவனங்களின் வலிமைகளை ஒருங்கிணைக்கும் இந்தப் கூட்டாண்மை, தொழில்நுட்பத் தற்சார்பை நோக்கிய இந்திய பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக அமைகிறது. இந்தக் கூட்டு முயற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, சர்வம் ஏஐ இடையே அண்மையில் கையெழுத்தானது.

இந்தியா தமது தேசிய செயற்கை நுண்ணறிவு செயல்திட்டத்தை விரைவுபடுத்தி வரும் நிலையில், இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளும், இந்தியச் சூழல்களைப் பிரதிபலிக்கும் மற்றும் இந்தியக் கட்டமைப்புகளிலேயே இயங்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிக அதிகமாக உள்ளது. இந்தியாவிற்காகவே அடிப்படையிலிருந்து கட்டமைக்கப்பட்ட, பலமொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் விரிவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், சர்வம் ஏஐ நிறுவனம் இத்துறையில் ஒரு முன்னணி சக்தியாக உள்ளது.

இந்திய மொழிகள் மற்றும் சூழல்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பலமொழி மொழி மாதிரிகள், உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் பேச்சுத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட, இந்தியாவை மையமாகக் கொண்ட அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கும் தமது நிபுணத்துவத்தை இந்தக் கூட்டாண்மைக்கு வழங்குகிறது.

தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி வேக ஈனுலை முதலாவது செயல்பாட்டை அடைந்தது

நாட்டின் அணுமின் சக்தித் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, 2026 ஏப்ரல் 6 அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது. இது நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறையாகும்.

மத்திய அணுசக்தி துறைச் செயலாளர் மற்றும் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அஜித் குமார் மொகந்தி, இந்திய அணுசக்தி ஆணையத்தின் இயக்குநர் திரு ஸ்ரீகுமார். பாவினி நிறுவனத்தின் பொறுப்புத் தலைவர் ஜி. பிள்ளை, மற்றும் நிர்வாக இயக்குநர் திரு அல்லு அனந்த் மற்றும் பாவினி மற்றும் ஹோமி சேத்னா முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநர் திரு கே.வி. சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த அணுப்பிளவு செயல்முறை நிகழ்த்தப்பட்டது. அணுமின் உற்பத்தி ஆலை கட்டமைப்புகளின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து அனுமதி பெற்ற பின்னர் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பிறகு, பாவினி மற்றும் ஹோமி சேத்னா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

முன்மாதிரி விரைவு கதிரியக்க அணு உலையின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வடிவமைப்பு, அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும், இது அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமான பாரதிய நபிகிய வித்யுத் நிகம் நிறுவனத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இயக்கப்பட்டது.

Police Public Networks Donates Medical Bed to Tambaram Government Hospital

Chennai / Tambaram | January 1, 2026

In a meaningful gesture of community solidarity, Police Public Networks (PPN), Chennai — a registered social service organization — donated a Double Fowler Medical Bed with Cot to the Government Headquarters Hospital, Tambaram. The handover ceremony took place on January 1, 2026, in the presence of hospital authorities and organization members.

This initiative forms part of PPN’s sustained commitment to strengthening public healthcare infrastructure and improving the quality of care available to underserved communities across Tamil Nadu.

About the Donation

The Double Fowler Medical Bed, known for its adjustable positioning features, is widely used in hospital settings to enhance patient comfort, assist in post-operative care, and support medical staff in administering treatment more effectively. The contribution is expected to directly benefit a significant number of patients at the Tambaram Government Hospital.

The medical bed was formally handed over to the Dean of the Government Headquarters Hospital, Tambaram, who acknowledged the organization’s generous support and its positive impact on patient care services.

Leadership & Initiative

The donation drive was spearheaded by HE. AMB. Dr. B. Prakash Kumar, Founder & President of Police Public Networks, along with the organization’s dedicated members and volunteers, who collectively coordinated the procurement and delivery of the medical equipment.

“People’s Service is Great Service.” — Motto of Police Public Networks

Distinguished Attendees

The event was graced by the presence of:

Dr. B. Mohana Priya – Publisher, Vallaval Urudhi Monthly Magazine
Mr. B. Vijay Anand Basker – Treasurer & Admin Coordinator, PPN | CEO, Vallaval Urudhi
Mr. R. Vinoth Jain – Manager, Commercial Welfare Dept., Chengalpattu – PPN
Mr. G. Vishnu Kumar – District President, Tiruvallur – PPN
Mr. U. Ashraf Khan – District President, Chengalpattu – PPN
Mr. P. Devendiran – District President, Kanchipuram – PPN

The event was also attended by PPN members, volunteers, and hospital staff and officials.

About Police Public Networks (PPN)

Police Public Networks is a registered social service organization based in Chennai, Tamil Nadu, actively engaged in a wide spectrum of community welfare initiatives, including:

  • Healthcare Support — Medical equipment donations, health camps, and patient assistance
  • Educational Assistance — Scholarships and learning support for underprivileged students
  • Disaster Response — Relief operations during floods, cyclones, and emergencies
  • Community Welfare — Livelihood support and public service collaborations

PPN continues to work in close partnership with government authorities, hospitals, and institutions to uplift underserved communities and reinforce public service systems across the region.

For media inquiries or further information about Police Public Networks and its initiatives, please contact the organization through its official channels.